தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தாகூர் கலை கல்லுாரி வளாகத்தில் 10ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தாகூர் கலை கல்லுாரி வளாகத்தில் 10ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தாகூர் கலை கல்லுாரி வளாகத்தில் 10ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்


ADDED : பிப் 07, 2024 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2024 11:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தாகூர் கலை கல்லுாரி வளாகத்தில் வரும் 10ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

இது குறித்து உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் செய்திக்குறிப்பு:

உழவர்கரை மற்றும் புதுச்சேரி நகராட்சி நகர வாழ்வாதார மையம், நவயுகா கன்சல்டன்சி சர்வீஸ், தேசிய நகர்புற வாழ்வதார இயக்கம் ஆகியன சார்பில், வேலைவாய்ப்பு முகாம் வரும் 10ம் தேதி தாகூர் கலை கல்லுாரி வளாகத்தில் காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை நடக்கிறது.தகவல் தொழில்நுட்பம், தொலை தொடர்பு, மருத்துவம், உற்பத்தி தொழிற்சாலைகள், ஆடைகள், மின்சாரம், மின்னணுவியல், சுற்றுலா, நிறுவன மேலாண்மை உள்பட பல துறைகளை சேர்ந்த நிறுவனங்களை ஒருங்கிணைத்து, நகராட்சி நிர்வாகம் இந்த முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த வாய்ப்பினை நகர்புற, கிராமப்புற வேலையற்ற இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு 0413-2962001, 9843612714, 7806801143 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us