/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆல்பா பொறியியல் கல்லுாரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
/
ஆல்பா பொறியியல் கல்லுாரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
ஆல்பா பொறியியல் கல்லுாரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
ஆல்பா பொறியியல் கல்லுாரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஜன 25, 2025 05:07 AM
புதுச்சேரி :  கன்னியகோவில் ஆல்பா பொறியியல் கல்லுாரியில் நாளை 26ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
ஆல்பா பொறியியல் கல்லுாரியின் தாளாளர் பாஷிங்கம் கூறியதாவது:
புதுச்சேரி ஆல்பா பொறியியல் கல்லுாரி தரமான கல்வியுடன் சிறந்த மாணவர்களை உருவாக்கி வருகிறது.
வளாக நேர்காணல் நடத்தி, வேலைவாய்ப்புகளையும் மாணவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்து வருகிறது.
அந்த வகையில், ஆல்பா பொறியியல் கல்லுாரி நடத்தும் வேலைவாய்ப்பு முகாம், கேம்பஸ் டிரைவ் என்ற பெயரில், நாளை 26ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது.
கன்னியகோவில் பாகூர் சாலை ஆல்பா பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடக்கும் இந்த வேலைவாய்ப்பு முகாமில், பிரபல பி.டபுள்யூ டிசைன் குரூப் நிறுவனம் பங்கேற்று தனது நிறுவனத்திற்கு அதிக பணியாட்களை நல்ல சம்பளத்தில் தேர்வு செய்ய உள்ளது.
முகாமில், 2022, 2023, 2024 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பங்கேற்கலாம். நடப்பு கல்வியாண்டில் பயிலும் அனைத்து கல்லுாரிகளை சேர்ந்த பி.இ., அல்லது பி.டெக்., மாணவர்கள் பங்கேற்கலாம். இ.சி.இ., சி.எஸ்.இ., இ.இ.இ., மெக்கானிக்கல், ஐ.டி., மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
முகாமில் பங்கேற்க  94875-89432 என்ற எண்ணில் பதிவு செய்யலாம். நேரிலும் வரலாம். முகாமிற்கு வரும்போது, 10ம் வகுப்பு, பிளஸ் 2, இன்ஜினியரிங் படிப்புகள் சம்பந்தப்பட்ட அசல் மற்றும் நகல் சான்றிதழ்களையும் அவசியம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

