தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பள்ளி மாணவர்களுக்கு ஏனாமில் விளையாட்டு போட்டி

பள்ளி மாணவர்களுக்கு ஏனாமில் விளையாட்டு போட்டி

பள்ளி மாணவர்களுக்கு ஏனாமில் விளையாட்டு போட்டி


ADDED : நவ 21, 2024 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2024 05:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் 8 மண்டலங்களாக பிரித்து நடந்தது. இதில் வெற்றி பெற்ற அணிகளின் இறுதி சாம்பியன்ஷிப் போட்டி, ஏனாமில் நடந்தது.

கூடைப்பந்து, கோகோ, பேட்மிட்டன் போட்டிகள் நடந்தது. இதில், 17 வயதிற்கு உட்பட்ட கூடைபந்து போட்டியில் உழவர்கரை முதலிடம், ஏனாம் 2ம் இடம், புதுச்சேரி முதல் வட்டம் 3வது இடம் பிடித்தன.

17 வயது ஆண்கள் கோகோ போட்டியில் உழவர்கரை 2வது வட்டம் முதலிடம், மதகடிப்பட்டு வில்லியனுார் அணி 2வது இடம், அரியாங்குப்பம் பாகூர் வட்டம் 3வது இடம் பிடித்தது. 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பேட்மிட்டன் போட்டியில், ஏனாம் முதலிடம், வில்லியனுார் மதகடிப்பட்டு வட்ட அணி 2வது இடம் பிடித்தன.

14 வயதிற்கு உட்பட்ட பேட்மிட்டன் போட்டியில் புதுச்சேரி முதலிடம், அரியாங்குப்பம் பாகூர் அணி 2வது இடம் பிடித்தன.

17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவு போட்டியில், புதுச்சேரி முதலிடம், உழவர்கரை வட்டம் அணி 2வது இடம், 14 வயதிற்கு உட்பட்ட பெண்கள் அணியில் புதுச்சேரி முதலிடம், 6வது வட்ட அணி இரண்டாமிடம் பிடித்தன.

பேட்மிட்டன் 17 வயது பெண்கள் பிரிவில், 6வது வட்டம் முதலிடம், உழவர்கரை 2வது இடம் பிடித்தன. 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் உழவர்கரை அணி முதல் இடம், காரைக்கால் 5வது வட்ட அணி 2வது இடம் பிடித்தன.

பெண்கள் 19 வயதினர் பிரிவில் காரைக்கால் முதல் இடம், புதுச்சேரி 2வது இடம், பெண்கள் 17 வயது பிரிவில் 6வது வட்டம் முதலிடம், உழவர்கரை 2வது இடம் பிடித்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us