/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நடைபாதையில் ஆக்கிரமிப்பு நகராட்சியின் நடவடிக்கை தேவை
/
நடைபாதையில் ஆக்கிரமிப்பு நகராட்சியின் நடவடிக்கை தேவை
நடைபாதையில் ஆக்கிரமிப்பு நகராட்சியின் நடவடிக்கை தேவை
நடைபாதையில் ஆக்கிரமிப்பு நகராட்சியின் நடவடிக்கை தேவை
ADDED : ஆக 26, 2025 07:25 AM

புதுச்சேரி : புதுச்சேரி அஜந்தா சிக்னல் முதல் கடற்கரை சாலை வரை நடைபாதையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
நகரத்தின் முக்கிய பகுதிகளில் அரசு பல லட்சம் ரூபாய் செலவு செய்து, நடைபாதையில் வண்ண கற்கள் பதித்துள்ளனர். அஜந்தா சிக்னல் முதல் கடற்கரை சாலை வரை நடைபாதையில், பூக்கடை, துணிக்கடை உள்ளிட்ட கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன.புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல், சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால், பாதசாரிகள் வாகன விபத்துகளில் சிக்குவது தொடர் கதையாக உள்ளது.இதனால், நடைபாதை, பாதசாரிகளுக்கா, இல்லை ஆக்கிரமிப்பாளர்களுக்கா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நகராட்சி அதிகாரிகள் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.