அமலாக்கத் துறை விசாரணை; அரசியல் கட்சிகள் கலக்கம்
அமலாக்கத் துறை விசாரணை; அரசியல் கட்சிகள் கலக்கம்
ADDED : டிச 14, 2025 05:20 AM
பு துச்சேரியில் பூதாகரமாகியுள்ள போலி மருந்து விவகாரத்தில், ரூ.200 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள், மூலப் பொருட்கள், பல நுாறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்கான ஆவணங்கள், 740 கிராம் வைரம், பிளாட்டினம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ராஜா (எ) வள்ளியப்பன் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நடத்திய சோதனையில், அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினருடன் தொடர்பில் இருப்பதற்கான சில முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளன.
இவ்வழக்கில் கோடி கணக்கில் பண பரிவர்த்தனை நடந்துள்ளதை தொடர்ந்து, அமலாக்கதுறையினர் விசாரணையை துவங்கி உள்ளனர். மேலும், வருமான வரித்துறை, மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகமும் இவ்வழக்கின் ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறது.
இதனால், ராஜாவிற்கு மறைமுகமாக உதவி செய்து வந்த அரசியல் பிரமுகர்கள், எங்கே தங்களது தொடர்பு அம்பலமாகி விடுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.
