'தினமலர்' நாளிதழ் நடத்தும் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி
'தினமலர்' நாளிதழ் நடத்தும் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி
ADDED : ஜூன் 12, 2026 05:54 AM

புதுச்சேரி:'தினமலர்' நாளிதழ் சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி கடலுார் மற்றும் விழுப்புரத்தில் வரும் 14ம் தேதி நடக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகம் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ.,-பி.டெக்., முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக அரசின் சார்பில், இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இதில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப் பிரிவை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து 'தினமலர்' நாளிதழ் வழிகாட்ட உள்ளது.
இதற்காக ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியுடன் இணைந்து தினமலர் நாளிதழ் சார்பில், 'டி.என்.இ.ஏ., இன்னிஜியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி-2026' என்ற நிகழ்ச்சியை, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடத்துகிறது.
கடலுார், விழுப்புரத்தில் வரும் 14ம் தேதி இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடலுார் டவுன் ஹாலில் காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 வரையிலும், விழுப்புரம் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஸ்ரீபாலாஜி மகாலில் மாலை 3:00 மணி முதல் மாலை 5:30 வரையிலும் நடக்கிறது.
இதில் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் புருேஷாத்தமன், கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா ஆகியோர் மாணவர்களுக்கு தேவையான தகவல்களை வழங்க உள்ளனர்.
ஆன்லைன் கவுன்சிலிங்கின் விதிமுறைகள், நுணுக்கங்கள், புரொவிஷனல் அலாட்மென்ட் பெறுதல், இந்தாண்டு கொண்டுவரப்பட்ட மாற்றங்கள், சிறந்த கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்தல்,'கட் ஆப்' மதிப்பெண்ணின் முக்கியத்துவம், தரவரிசை, விருப்ப பாட பிரிவை தேர்வு செய்யும் முறை, வேலை வாய்ப்புகள் மிகுந்த இன்ஜினியரிங் பாட பிரிவுகள், நவீன தொழில் நுட்ப படிப்புகளின் எதிர்காலம், போன்றவை குறித்த சந்தேகங்களுக்கு நிபுணர்களிடம் விளக்கம் பெறலாம்.
இந்தாண்டு எந்த படிப்பிற்கு மவுசு அதிகம், என்ன படிப்பிற்கு என்ன எதிர்காலம், கோர் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு உள்ள வாய்ப்புகள், சிறந்த கல்லுாரியை தேர்வு செய்யும் வழிமுறைகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் இங்கு விடை தேடலாம்.
இலவச முன்பதிவிற்கு 'தினமலர்' இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம்.
இதில் பங்கேற்க கியூ.ஆர்.கோடு ஸ்கேன் செய்து அல்லது 9566777833 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் RGN என்று டைப் செய்து பதிவு செய்யலாம்.
