/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐ.சி.டி., அகாடமி போட்டியில் பொறியியல் மாணவி சாதனை
/
ஐ.சி.டி., அகாடமி போட்டியில் பொறியியல் மாணவி சாதனை
ADDED : அக் 12, 2025 04:40 AM

புதுச்சேரி 'ஐ.சி.டி அகாடமி நடத்திய யூத் டாக் 2025 போட்டியில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி மாணவி கீர்த்தனா மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ஐ.சி.டி அகாடமி சார்பில், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் ஏ.ஐ. டி.எஸ். 'யூத் டாக் 2025' போட்டி நடந்தது. இதன் முதல் சுற்றில் மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியின் ஏ.ஐ.டி.எஸ்., 4ம் ஆண்டு மாணவி கீர்த்தனா உள்ளிட்ட பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அதில், 107 மாணவர்கள் மாநில அளவிலான முன் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். பின், 12 நடுவர்கள் அடங்கிய குழு மாணவர்களின் பேச்சுத்திறனை மதிப்பிட்டு 20 பேரை தேர்வு செய்தனர். அதில், 10 மாணவர்கள் மணக்குள விநாயகர் கல்லுாரியை சார்ந்தவர்கள் ஆவார். இறுதிச்சுற்று ஐந்து தொழில் துறை நடுவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் நடந்தது. இறுதிச்சுற்றில் மாணவி கீர்த்தனா மாநில அளவில் 2ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தனர்.
அவரை, மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜ ராஜன், இணை செயலாளர் வேலாயுதம், தட்சக் ஷீலா பல்கலைக்கழக டாக்டர் நிலா பிரியதர்ஷினி, கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி உட்பட பலர் பாராட்டினர்.