sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பி.டெக்.,படிப்புகள் மீதான மோகம் குறைந்தது: 5 ஆண்டுகளில் 7 கல்லுாரிகள் மூடல்

/

பி.டெக்.,படிப்புகள் மீதான மோகம் குறைந்தது: 5 ஆண்டுகளில் 7 கல்லுாரிகள் மூடல்

பி.டெக்.,படிப்புகள் மீதான மோகம் குறைந்தது: 5 ஆண்டுகளில் 7 கல்லுாரிகள் மூடல்

பி.டெக்.,படிப்புகள் மீதான மோகம் குறைந்தது: 5 ஆண்டுகளில் 7 கல்லுாரிகள் மூடல்


ADDED : மே 10, 2024 01:35 AM

Google News

ADDED : மே 10, 2024 01:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:புதுச்சேரியில் பி.டெக்.,படிப்புகள் மீதான மோகம் ஆண்டுதோறும் குறைந்து வரும் சூழ்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஏழு தனியார் கல்லுாரிகள் இழுத்து மூடப்பட்டுள்ளன.

எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ்.,மருத்துவப் படிப்புகளுக்கு அடுத்தபடியாக புதுச்சேரி மாணவர்கள் அதிகம் விரும்பும் படிப்பாகப் பி.டெக்.,பொறியியல் இருந்து வருகின்றது என்று பலரும் கைகாட்டுகின்றனர்.

ஆனால், நடைமுறையினை பார்க்கும்போது, நாளுக்கு நாள் பொறியியல் படிப்பின் மீதான மோகம் குறைந்துகொண்டே வருகின்றது என்பதே கசப்பான உண்மையாக உள்ளது.

கடந்த 2019ம் ஆண்டில், புதுச்சேரி மாநிலத்தில் 2 அரசு பொறியியல் கல்லுாரிகள், 17 தனியார் பொறியியல் கல்லுாரிகள் இருந்தன.இவற்றில் 7 ஆயிரம் பி.டெக்., சீட்டுகள் நிரப்பப்பட்டு வந்தன. ஆனால்,கடந்த ஐந்து ஆண்டுகளில் பொறியியல் படிப்புகளில் எல்லாமே தலைகீழாக மாறிபோய்விட்டது.இந்த ஐந்து ஆண்டில் அரசு பொறியியல் கல்லுாரிகளில் ஒரு கல்லுாரி உயர்ந்திருந்தாலும்,7 தனியார் பொறியியல் கல்லுாரிகள் இழுத்து மூடப்பட்டுவிட்டன.

இந்தாண்டு சென்டாக் கவுன்சிலிங் களத்தில் வெறும் 10 தனியார் கல்லுாரிகள் மட்டுமே நின்று,அரசு ஒதுக்கீட்டு இடங்களும் சுருங்கிபோய் விட்டது.இதில் 3 தனியார் பொறியியல் கல்லுாரிகளில் நிலைமை சிக்கலாகவே உள்ளது.இந்தாண்டு இந்த பொறியியல் இடங்களில் 50 கூட நிரம்புமா என்பதே சந்தேகமாக உள்ளது.விரைவில் இந்த மூன்று மூடப்படும் லிஸ்ட்டில் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதில்லை.

மாறிவரும் கல்விபோக்குகள் குறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:

ஒரு காலத்தில் பொறியியல் படிப்பது என்பது பலருடைய கனவாக இருந்தது.

பொறியியல் படிப்பு என்பது பல மாணவர்களின் லட்சியமாக இருந்தது. இதனால், பல மாணவர்கள் இடம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த காலங்கள் உண்டு. இதனால் 2000 ஆண்டிற்கு பிறகு புதுச்சேரியில் தனியார் பொறியியல் கல்லுாரிகள் அதிக அளவில் தோன்றின. இதனால், பொறியியல் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

அப்போது, பொறியியல் படித்த மாணவர்கள் நல்ல வேலை கிடைத்து கை நிறைய சம்பாதிக்கவும் செய்தனர்.

பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது, பல பொறியியல் படித்த இளைஞர்கள் வேலை இழந்தனர். பொறியியல் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் குறையத் தொடங்கியது. தனியார் பொறியியல் கல்லுாரிகளில் லட்சக் கணக்கில் செலவு செய்து பொறியியல் படித்தவர்கள் ரூ.15,000 சம்பளத்துக்கு வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதன் பிறகுதான், மாணவர்களிடையே பொறியியல் படிப்பு மீதான ஆர்வமும் குறையத் தொடங்கி உள்ளது. அதே வேளையில், கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகள் பக்கம் மாணவர்கள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.

நெருக்கடி


புதுச்சேரியில் பொறியியல் கல்லுாரிகளில் ஆண்டிற்கு ஆண்டு மாணவர் சேர்க்கை சரிந்து வருதை தொடர்ந்து நிர்வாக செலவுகளை சமாளிக்க முடியாமல் தனியார் கல்லுாரிகள் மாணவர் சேர்க்கை வேண்டாம் என அறிவித்து அமைதியாகி விட்டன. இக்கல்லுாரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலும் அங்கீகாரம் கொடுக்கவில்லை.

இதன் காரணமாகவே கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏழு தனியார் பொறியியல் கல்லுாரி கலை கல்லுாரிகளாக மாறிவிட்டன.

இந்தாண்டு மூன்று அரசு பொறியியல் கல்லுாரி,10 தனியார் பொறியியல் கல்லுாரியில் மொத்தம் 5,264 பி.டெக்.,இடங்கள் உள்ளன.இதில் 50 சதவீத பி.டெக்., இடங்கள் கூட நிரம்பினால் இக்கல்லுாரிகள் தப்பித்துகொள்ளும்.

இல்லையெனில் இன்னும் சில தனியார் பொறியியல் கல்லூரிகள் நடத்தப்படாத அளவிற்கு இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும்.

இதனால் அரசு ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கையும் குறையும் என்று எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.

கல்லுாரிகள் என்ன செய்ய வேண்டும்

கல்வியாளர்கள் கூறும்போது,பி.டெக்., படிப்புக்கும் வேலைக்கும் இடைவெளி அதிகமாக இருக்கிறது. தொழிற்சாலைகள் எதிர்பார்க்கும் திறமைகள், திறன்கள் மாணவர்களிடம் இல்லை.எனவே தொழில் நிறுவனங்கள் என்ன எதிர்பார்க்கின்றன என்பதைக் கவனித்து மாணவர்களுக்கு வகுப்பெடுக்க வேண்டும். இதற்கு ஏற்றவாறு ஆசிரியர்களைத் தயார் செய்ய வேண்டும். மாதம்தோறும் தொழில்நுட்பம் மாறிக்கொண்டிருக்கிறது. தொழிற்சாலைகளுக்கு ஏற்ற வகையில் மாணவர்களைத் தயார் செய்ய வேண்டும்.புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் போன்ற மிகப் பெரிய கல்வி நிறுவனங்கள் இதை முன்னெடுக்க வேண்டும். மிகப் பெரிய தனியார் பொறியியல் கல்லூரிகளும், வேலை வாங்கித் தருவது மட்டும்தான் எங்களுடைய வேலை என்றில்லாமல், இன்று இருக்கக்கூடிய புதிய தொழில்நுட்பங்களில் கல்லுாரிகள் முதலீடு செய்ய வேண்டும். அப்போதுதான் தகுதியான மாணவர்களை உருவாக்கி சாதிக்க முடியும் என்றனர்.








      Dinamalar
      Follow us