தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நுகர்வோர் உரிமை தின கட்டுரை போட்டிக்கு மாணவர்களிடமிருந்து படைப்புகள் வரவேற்பு

 நுகர்வோர் உரிமை தின கட்டுரை போட்டிக்கு மாணவர்களிடமிருந்து படைப்புகள் வரவேற்பு

 நுகர்வோர் உரிமை தின கட்டுரை போட்டிக்கு மாணவர்களிடமிருந்து படைப்புகள் வரவேற்பு


ADDED : மார் 08, 2026 03:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 03:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி, கட்டுரை போட்டிக்கு கல்லுாரி மாணவர்களிடமிருந்து படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய பொது நிர்வாக நிறுவனம், புதுச்சேரி கிளை சார்பில், உலக நுகர்வோர் உரிமைகள் தினம் வரும் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, மாணவர்களிடமிருந்து கட்டுரை போட்டிக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

இந்த கட்டுரை போட்டிகள், 1. பாதுகாப்பான பொருட்கள் - நம்பிக்கையான நுகர்வோர், 2. டிஜிட்டல் நுகர்வோர் பாதுகாப்பும் செயற்கை நுண்ணறிவும், 3. நுகர்வோர் உரிமைகள் சட்ட அமைப்புகள், 4. நிலைத்த வாழ்வியல் முறைகளும் நியாயமான மாற்றம் என்ற தலைப்புகளிலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் நடத்தப்பட உள்ளன.

மாணவர்கள் இதில் ஏதாவது ஒரு தலைப்பில் தங்கள் சொந்த முயற்சியில் 350 முதல் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கட்டுரை எழுதி அனுப்பலாம். அனைத்து இறுதியாண்டு கல்லுாரி மாணவர்களும் கலந்து கொள்ளலாம். பங்கேற்கும் மாணவர்களுக்கு இ-சான்றிதழ் வழங்கப்படும். வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசும், சான்றிதழ் வழங்கப்படும். கட்டுரைகள் ஏ-4 தாளில் 2 பக்கம் மிகாமல் இருக்க வேண்டும்.

கட்டுரைகளை வரும் 11ம் தேதிக்குள் iipaofficework@gmail.com என்ற இணைய முகவரில் அனுப்ப வேண்டும். இத்தகவலை இந்திய பொது நிர்வாக நிறுவனம், புதுச்சேரி கிளை தலைவர் தனபால் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us