/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க சுற்றுச்சூழல் துறை கட்டுப்பாடு
/
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க சுற்றுச்சூழல் துறை கட்டுப்பாடு
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க சுற்றுச்சூழல் துறை கட்டுப்பாடு
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க சுற்றுச்சூழல் துறை கட்டுப்பாடு
ADDED : அக் 18, 2024 06:26 AM
புதுச்சேரி: தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச் சூழல் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி தீபாவளி பண்டிகைக்கு புதுச்சேரியில் காலை 6:00 மணி முதல் 7:00 மணிவரையிலும், இரவு 7:00 மணி முதல் 8:00 மணிவரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.
சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க வேண்டும்.
பேரியம் கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள், சரவெடி மற்றும் அதிகம் சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.
அமைதி பகுதிகளான மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் கோர்ட் உள்ளிட்ட பகுதிகளில் 100 மீட்டர் சுற்றளவிற்கு பட்டாசுகள் வெடிக்கக்கூடாது.
பட்டாசுகள் வெடிப்பதன் மூலம் முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள், இதயம் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுவர்.
எனவே, தீபாவளி பண்டிகையை ஒலி மற்றும் புகையில்லா தீபாவளியாக மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.