/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுற்றுச்சூழல் மேலாண்மை பயிற்சி முகாம் நீதிபதிகள்,வழக்கறிஞர்கள் பங்கேற்பு
/
சுற்றுச்சூழல் மேலாண்மை பயிற்சி முகாம் நீதிபதிகள்,வழக்கறிஞர்கள் பங்கேற்பு
சுற்றுச்சூழல் மேலாண்மை பயிற்சி முகாம் நீதிபதிகள்,வழக்கறிஞர்கள் பங்கேற்பு
சுற்றுச்சூழல் மேலாண்மை பயிற்சி முகாம் நீதிபதிகள்,வழக்கறிஞர்கள் பங்கேற்பு
ADDED : ஜன 06, 2024 06:45 AM

புதுச்சேரி : கடற்கரை சாலை சட்ட ஆலோசனை மையத்தில் நடந்த சுற்றுச்சூழல் மேலாண்மை பயிற்சி முகாமில் மாவட்ட நீதிபதிகள்,வழக்கறிஞர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
தேசிய பசுமை தீர்ப் பாயம், மாநிலங்களின் மாவட்ட நீதிபதிகள்,அரசு வழக்கறிஞர்கள், காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு சுற்றுச்சூழல் மேலாண்மை பற்றிய பயிற்சி முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கடற்கரை சாலையில் உள்ள சட்ட ஆலோசனை மையத்தில் அறிவியல் தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் துறை சார்பில், சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் இந்திய அரசியலமைப்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
மாசுக்கட்டுபாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் வரவேற்றார்.இந்திய பொறியியல் பணியாளர் கல்லுாரி சுற்றுச்சூழல் மேலாண்மை பிரிவு தலைவர் அனிதா அகர்வால் அறிமுகவுரையாற்றினார்.
மாவட்ட நீதிபதி அம்பிகா வாழ்த்தி பேசினார்.பெங்களூருவில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழக பேராசிரியர் சாய்ராம்பட், இந்திய அரசியலமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பிலும், ைஹதராபாத் பொறியியல் பணியாளர் கல்லுாரி பேராசிரியர் யராந்தி ஷியாம் சுந்தரம் சுற்றுச்சூழல் மேலாண்மை குறித்தும் கலந்துரையாடி விளக்கம் அளித்தனர்.
சுற்றுச்சூழல் பொறியாளர் காளமேகம் நன்றி கூறினார்.