ADDED : ஜன 15, 2025 12:28 AM

அ நிறம் | அளவு
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில், போலீசார் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
பொங்கல் பண்டிகையை தமிழர்கள் பாரம்பரிய மரபுபடி, மக்கள் வீடுகளில் வெளியே பானை வைத்து, பொங்கல் உணவுகளை சூரியனுக்கு படையல் செய்தனர்.
இப்பண்டிகையை, அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், மண்பானையில், பொங்கல் வைத்து, படையல் செய்தனர்.
நிகழ்ச்சியில், சப் இன்ஸ் பெக்டர் கதிரேசன் முன்னிலையில், ஏ.எஸ்.ஐ., சக்திவேல், வேல்முருகன் உட்பட பெண் போலீசார் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து, போலீசார் ஒருவொருக்கு, ஒருவர், பொங்கல் வாழ்த்துக்களை, தெரிவித்து கொண்டனர்.
