/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுய உதவிக்குழு கட்டடத்தில் ரூ.8.75 லட்சத்தில் 'ெஷட்'
/
சுய உதவிக்குழு கட்டடத்தில் ரூ.8.75 லட்சத்தில் 'ெஷட்'
சுய உதவிக்குழு கட்டடத்தில் ரூ.8.75 லட்சத்தில் 'ெஷட்'
சுய உதவிக்குழு கட்டடத்தில் ரூ.8.75 லட்சத்தில் 'ெஷட்'
ADDED : மார் 16, 2024 11:12 PM

புதுச்சேரி: ஆலங்குப்பத்தில் சுய உதவிக் குழு கட்டடத்தில், 8.75 லட்சம் ரூபாய் செலவில் விற்பனைக் கூடத்திற்கான ஷெட் அமைக்கும் பணியை, கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
காலாப்பட்டு தொகுதி, ஆலங்குப்பம் கிராமம், அங்காளம்மன் கோவில் அருகில், நீர் தேக்கத் தொட்டி வளாகத்தில், மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்களை சந்தைப் படுத்தும் கட்டடம், கடந்த, 2021,ல், ஏற்படுத்தப்பட்டது.
அங்கு தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்ய இடம் போதுமானதாக இல்லாததால் உழவர்கரை நகராட்சி மூலம் ரூ.8.75 லட்சம் செலவில் சுய உதவிக் குழு கட்டடத்தை சுற்றிலும், 'ஷெட்' அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கான பணிகளை, கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கிராம பஞ்சாயத்தார், பா.ஜ., நிர்வாகிகள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் பங்கேற்றனர்.