தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி காரைக்காலில்  27ம் தேதி இ.எஸ்.ஐ., முகாம்   

 புதுச்சேரி காரைக்காலில்  27ம் தேதி இ.எஸ்.ஐ., முகாம்   

 புதுச்சேரி காரைக்காலில்  27ம் தேதி இ.எஸ்.ஐ., முகாம்   


ADDED : மார் 23, 2026 08:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2026 08:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தொழிலாளர் காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ) சார்பில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் குறை தீர்ப்பு முகாம் வரும் 27ம் தேதி நடக்கிறது.

தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் புதுச்சேரி மண்டல அலுவலக செய்திகுறிப்பு:

தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழகம் (இ.எஸ்.ஐ) மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் ( இ.பி.எப்.ஒ) ஒருங்கிணைந்து விழிப்புணர்வு மற்றும் குறை தீர்ப்பு முகாம் வரும் 27ம் தேதி நடக்கிறது. புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள தி சென்னை சில்க்ஸ் இடத்திலும், காரைக்கால் பஜார், பாரதி நகரில் உள்ள வித்யோதயா உயர்நிலைப்பள்ளியில் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது.

எனவே தொழிலாளர்கள், பயனாளிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் தங்கள் இ.எஸ்.ஐ., மற்றும் இ.பி.எப்.ஓ., தொடர்பான கோரிக்கைகளை முகாமில் தெரிவிக்கலாம். கோரிக்கைகளை உடனடியாக பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us