/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி: நடுக்குப்பம் மக்கள் எதிர்ப்பு
/
முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி: நடுக்குப்பம் மக்கள் எதிர்ப்பு
முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி: நடுக்குப்பம் மக்கள் எதிர்ப்பு
முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி: நடுக்குப்பம் மக்கள் எதிர்ப்பு
ADDED : டிச 18, 2024 05:38 AM

கோட்டக்குப்பம்: நடுக்குப்பம் கடலோரத்தில் முகத்துவாரம் ஆழப்படுத்தம் பணிக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி, லாஸ்பேட்டை, நாவற்குளம் மற்றும் சின்ன கோட்டக்குப்பம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் முழுதும், இ.சி.ஆரில் இருந்து பழைய பட்டிணப்பாதை பிரதான கழிவுநீர் கால்வாய் மூலம் நடுகுப்பம் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கிறது.
தற்போது கழிவுநீர், மழைநீர் கடலுக்கு செல்லாமல் ஆங்காங்கே கால்வாய்களில் தேங்கியது.
இதையடுத்து கோட்டக்குப்பம் நகராட்சி அதிகாரிகள், நடுக்குப்பம் கடலோர பகுதியில் முகத்துவாரத்தை துார் வார நேற்று ஜே.சி.பி., இயந்திரத்துடன் சென்றனர். இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீசார், நகரமன்ற தலைவர் ஜெயமூர்த்தி, கவுன்சிலர் மூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், நடுக்குப்பம் மீனவர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் நாங்கள் வெளியேற்றும் கழிவு நீர் முழுதும் சாலையில் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.
இதன் விளைவாக கழிவுநீர் கால்வாய் சுடுகாடு பாதை வழியாக அமைத்தனர். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த பணியை நிறுத்தி வைத்துள்ளீர்கள். அந்த பணியை முழுமையாக முடித்த பிறகு, முகத்துவாரத்தை துார்வாருங்கள் என கூறினர்.
அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, விரைந்து உங்கள் பகுதியில் கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
அதை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அதை தொடர்ந்து முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி துவங்கியது.