/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாஜி அமைச்சரிடம் ரூ. 87 ஆயிரம் 'அபேஸ்'
/
மாஜி அமைச்சரிடம் ரூ. 87 ஆயிரம் 'அபேஸ்'
ADDED : அக் 27, 2024 03:49 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் சைபர் கிரைம் மோசடி நடக்காத நாட்களே இல்லை. புது புது விதத்தில் மோசடி செய்கின்றனர். சைபர் கிரைம் மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம் என, போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பலரும் ஏமாறுவது தொடர்கிறது.
அந்த வரிசையில் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகானும், மோசடி நபர்களிடம் பணத்தை இழந்துள்ளார். சில நாட்களுக்கு முன், முன்னாள் அமைச்சர் ஷாஜகானை, மொபைல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், தான் தனியார் வங்கியில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்தி கொண்டார்.
உங்களின் கிரெடிட் கார்டில் கடன் வாங்கும் தொகையை உயர்த்தி தருவதாக கூறினார்.
அதனை ஏற்ற முன்னாள் அமைச்சர் ஷாஜகான், ஓ.டி.பி., உள்ளிட்ட தகவல்களை மர்ம நபரிடம் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நிமிடத்தில் அவரது கிரெடிட் கார்டு அக்கவுண்டில் இருந்து ரூ. 87 ஆயிரம் பணம் திருடப்பட்டது.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஷாஜகான், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.