/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாக்கெட் சாராயத்திற்கு மீண்டும் தடை கலால் துறை அதிரடி உத்தரவு
/
பாக்கெட் சாராயத்திற்கு மீண்டும் தடை கலால் துறை அதிரடி உத்தரவு
பாக்கெட் சாராயத்திற்கு மீண்டும் தடை கலால் துறை அதிரடி உத்தரவு
பாக்கெட் சாராயத்திற்கு மீண்டும் தடை கலால் துறை அதிரடி உத்தரவு
ADDED : அக் 18, 2024 06:09 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் விற்க கலால் துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் 110 சாராயக் கடைகளும், 92 கள்ளுக் கடைகள் உள்ளன. இதில், சாராயக்கடைகளில் பாக்கெட்டில் சாராயம் அடைத்து விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு முதல் புதுச்சேரியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை தடை விதித்து உத்தரவிட்டது. அதனையொட்டி, பாக்கெட்டில் சாராயம் விற்க தடை விதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, புதுச்சேரி மற்றும் காரைக்கால் சாராயக்கடை உரிமை யாளர்கள் சங்கத்தினர், மீண்டும் பாக்கெட்டில் சாராயம் அடைத்து விற்பனை செய்ய கலால் துறையிடம் அனுமதி கோரினர்.
அதனையேற்று மீண்டும் பாக்கெட் சாராயம் விற்க கலால்துறை அனுமதி வழங்கியது. இந்நிலையில், அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, சமீபத்தில் கலால் துறைக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது.
அதில், கடந்த 1.8.2019 முதல் பல்வேறு கட்டங்களில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு முழுமையான தடை அமல்படுத்தப்படுகிறது. மேலும், பிளாஸ்டிக் கப், கேரி பேக் உள்ளிட்டவை தடிமன் எதுவாக இருந்தாலும் பிளாஸ்டிக் மேலாண்மை விதிகளின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
அதனையொட்டி, மாநிலத்தில் மீண்டும் பாக்கெட் சாராயம் விற்பனைக்கு தடை விதித்து கலால் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது.