/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் கட்டணம் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் செயற்பொறியாளர் எச்சரிக்கை

ADDED : அக் 08, 2025 08:10 AM
புதுச்சேரி : மின் நுகர்வோர் நிலுவைத் தொகை மற்றும் கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு கோட்ட செயற்பொறியாளர் கிருஷ்ணசாமி செய்திக்குறிப்பு:
கிராமம் (தெற்கு) மின் கோட்ட அலுவலகத்திற்கு உட்பட்ட அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரிக்கலாம்பாக்கம், வடமங்கலம், திருவண்டார்கோவில், வாதானுார், கரியமாணிக்கம், கரையாம்புத்துார் ஆகிய மின் அலுவலகங்களுக்கு உட்பட்ட நுகர்வோர் அனைவரும் தங்களின் நிலுவைத் தொகை மற்றும் மின் கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்தி, மின் துண்டிப்பை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மின் துண்டிப்பு செய்த பின் நிலுவைத் தொகை முழுதுமாக அல்லது தவணை முறையில் பகல் 12:30 மணிகுள் செலுத்திய பிறகே வழங்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.