sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 காங்., தலைவருக்கு நிர்வாகிகள் பாராட்டு

/

 காங்., தலைவருக்கு நிர்வாகிகள் பாராட்டு

 காங்., தலைவருக்கு நிர்வாகிகள் பாராட்டு

 காங்., தலைவருக்கு நிர்வாகிகள் பாராட்டு


ADDED : பிப் 24, 2026 04:26 AM

Google News

ADDED : பிப் 24, 2026 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் பா.ஜ.,விற்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்., மாநில பொதுச் செயலாளர் திருமுருகன் விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியில் பா.ஜ.,வை சேர்ந்தவர்கள், காங்., அலுவலகத்தின் எதிரே ராகுல் உருவ பொம்மையை எரித்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில், காங்., மாநில தலைவர் வைத்திலிங்கத்தின் தைரியமான மற்றும் ஊக்கமூட்டும் தலைமையில், பா.ஜ., அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் 400க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, பா.ஜ.,வினரின் செயலுக்கு எதிராக வலுவான முறையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். கட்சித் தொண்டர்களை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக வழி நடத்திய மாநிலத் தலைவர் வைத்திலிங்கம், தைரியமான தலைமைத்துவம் கொண்ட மக்களின் தலைவராக மீண்டும் தன்னை நிரூபித்துள்ளார்.

சவாலான சூழ்நிலையில் தளராத மனநிலையுடன், தொண்டர்களுக்கு ஊக்கமும், நம்பிக்கையும் அளித்து, செயல்பட செய்தது அவரது தலைமைத்துவத்தின் வலிமையை வெளிப்படுத்துகிறது. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமையுடன் வைத்திலிங்கத்தை பாராட்டுகின்றனர்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us