/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தென்னையில் வேர் மூலம் மருந்து செலுத்த செயல் விளக்கம்
/
தென்னையில் வேர் மூலம் மருந்து செலுத்த செயல் விளக்கம்
தென்னையில் வேர் மூலம் மருந்து செலுத்த செயல் விளக்கம்
தென்னையில் வேர் மூலம் மருந்து செலுத்த செயல் விளக்கம்
ADDED : ஜன 04, 2025 04:50 AM

புதுச்சேரி: மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி மாணவர்கள், தென்னையில் வேர் மூலம் மருந்து செலுத்தும் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.
புதுச்சேரி மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரியில் இளநிலை இறுதியாண்டு தோட்டக்கலைத்துறை மாணவர்கள் சோரப்பட்டில் ஊரக வேளாண் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, கல்லுாரி முதல்வர் முகமதுயாசின், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ் கெலுஸ்கர், திட்ட பொறுப்பாளர் மோகன் மற்றும் சோரப்பட்டு வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன் வழிகாட்டுதலின்படி, சோரப்பட்டைச் சேர்ந்த சம்பத் என்பவரது 3 ஏக்கர் விவசாய நிலத்தில் தென்னையில் ஏற்படும் வாடல் நோயை கட்டுப்படுத்துவதற்காக வேர் மூலம் மருந்து செலுத்தும் தொழில்நுட்பம் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.
இதில், 20க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் பங்கேற்றனர்.