/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அசோலா வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்
/
அசோலா வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்
ADDED : பிப் 20, 2024 11:35 PM

திருக்கனுார், : குச்சிப்பாளையத்தில் அசோலா வளர்ப்பு குறித்து காரைக்கால் வேளாண் கல்லுாரி மாணவர்கள் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
காரைக்கால் ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவர்கள் மூன்று மாத ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சியை குச்சிப்பாளையம் பகுதியில் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கான அசோலா வளர்ப்பு, பூஜ்ஜிய ஆற்றல் குளிர் அறை பற்றிய செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி பேராசிரியர் பார்த்தசாரதி, துணை பேராசிரியர்கள் மனோஜ் குமார், பிரேம்குமார் மற்றும் ராஜசேகர் ஆகியோர் மாணவர்களின் பயிற்சியை பார்வையிட்டனர்.
இதில், மாணவர்கள் கீர்த்தனா, ஷர்மிதா, ராகவி, ஸ்வர்ணா, பத்மஸ்ரீ செல்வம், புவனா , ஹேமவர்ஷினி, ஜனமித்ரா, சீதலாதேவி, கலை ஸ்ரீ, பிரசன்னா, மோனிகா ஆகியோர் அசோலா வளர்ப்பு மற்றும் பூஜ்ஜிய ஆற்றல் குளிர் அறை பற்றி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
இதில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

