/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூட்டுறவு ஆலையில் நுால் தயாரிப்பு கல்லுாரி மாணவர்களுக்கு விளக்கம்
/
கூட்டுறவு ஆலையில் நுால் தயாரிப்பு கல்லுாரி மாணவர்களுக்கு விளக்கம்
கூட்டுறவு ஆலையில் நுால் தயாரிப்பு கல்லுாரி மாணவர்களுக்கு விளக்கம்
கூட்டுறவு ஆலையில் நுால் தயாரிப்பு கல்லுாரி மாணவர்களுக்கு விளக்கம்
ADDED : மார் 31, 2025 07:41 AM

காரைக்கால் : காரைக்காலில் ஜெயபிரகாஷ் நாராயணன் கூட்டுறவு நுாற்பாலையில் நூல் தயாரிப்பு குறித்து கல்லுாரி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
காரைக்கால் கீழமனை நிரவி பகுதியில் உள்ள ஜெயபிரகாஷ் நாராயன் கூட்டுறவு நுாற்பாலையில் டான் போஸ்கோ கல்லுாரி பி.பி.ஏ., இறுதி ஆண்டு மாணவர்கள் நுாற்பலையின் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் நுால் தயாரிக்கும் முறைகளையும் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு நுாற்பாலை அதிகாரிகள் பதில் அளித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஆலையின் மேலாண் இயக்குனர் வெங்கடகிருஷ்ணன், தொழிற்சாலை மேலாளர் சார்லஸ் விஜய், நிர்வாக மேலாளர் நாகராஜன் ஆகியோர் மாணவர்கள் பயனடையும் வகையில் சிறப்பாக செய்திருந்தனர்.
இதில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.