தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எக்ஸ்போ பேட்டி… புட் கோர்ட் சூப்பர்

எக்ஸ்போ பேட்டி… புட் கோர்ட் சூப்பர்

எக்ஸ்போ பேட்டி… புட் கோர்ட் சூப்பர்


UPDATED : ஆக 08, 2026 08:50 PM

ADDED : ஆக 08, 2026 08:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2026 08:50 PM ADDED : ஆக 08, 2026 08:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புட் கோர்ட் சூப்பர்; குளு, குளு ஸ்டாலில் எக்ஸ்போ சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. புட் கோர்ட்டில் திண்டுக்கல் வேணு பிரியாணி உள்ளிட்ட அனைத்து உணவு வகைகளும் சூப்பரா இருக்கிறது. ஸ்நாக்ஸ் பொருட்களை சாப்பிட்டு பார்த்து வாங்குவதற்கு சாம்பிள் கொடுக்கின்றனர்.

பார்கவி, லாஸ்பேட்டை.

பொழுது போக்கிற்கு சிறந்த எக்ஸ்போ; குழந்தைகளின் பொழுதுபோக்கிற்கு 'தினமலர்' எக்ஸ்போ சிறந்த இடமாக உள்ளது. எக்ஸ்போவில் இல்லாத பொருள் என்று எதுவும் இல்லை. வெளியில் கிடைக்காத பொருட்கள் கூட இங்கு கிடைக்கிறது. புதுச்சேரி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக எக்ஸ்போ அமைந்துள்ளது.

ஆதைதம்பி, நெல்லித்தோப்பு.

ஆட்டோ மொபைல் ஆலோசனை அனைத்து வீட்டு உபயோக பொருட்களும் இங்கு தரமாக கிடைக்கிறது. ஆட்டோ மொபைல் வாங்குவதற்கு இங்குள்ள ேஷாரூம்களில் சிறந்த முறையில் ஆலோசனைகள் வழங்குகின்றனர். பல்வேறு உற்பத்தி நிறுவனங்களின் பொருட்கள் இங்கு நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது.

ராம்குமார், நெல்லித்தோப்பு.

இல்லத்தரசிகள் பயன்

மூன்று ஆண்டுகளாக தினமலர் எக்ஸ்போவிற்கு வந்து செல்கிறேன். எக்ஸ்போவில், இல்லத்தரசிகளுக்கு தேவையான அனைத்தும் பொருட்களும், புதுப்புது மாடல்களில் ஒரே இடத்தில் கிடைப்பது பயனுள்ளதாக உள்ளது. மேலும், அனைத்து மக்களும் விரும்பி சாப்பிடும் வெளிமாநில ஸ்நாக்ஸ், உணவுகள் இங்கு கிடைத்தது.

விஷாலி, ஏம்பலம்.

நாள் முழுவதும் என்ஜாய் எக்ஸ்போவிற்கு குடும்பத்துடன் வந்து ஒரு நாள் முழுவதும் என்ஜாய் செய்தேன். 'தினமலர்' எக்ஸ்போ என்றாலே, கிடைக்காத பொருட்கள் கூட, கிடைக்கும். அந்த வகையில் எங்கள் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கியது மகிழ்ச்சியாக இருந்தது.

திவ்யா, விழுப்புரம்.

-----------------------------

குட்டீஸ்கள் குஷி

பறவைகள் உலகம் சூப்பர் எக்ஸ்போவில் பறவைகள் உலகம் சூப்பராக இருந்தது. அனைத்து கேம்களும் விளையாடினேன். என் கை மற்றும் தோள்களில் பறவைகள் அமர்ந்தது ஜாலியாக இருந்தது. அவதார் அரங்கம், ஒரிஜனல் அவதார் உலகத்தை சுற்றி பார்த்தது போன்று இருந்தது.

அப்ரா, நெல்லிக்குப்பம், கடலுார்.

பாம்புகளை தொட்டு பார்த்தேன் எக்ஸ்போவில் எங்களுக்கு பிடித்த பொம்மைகள் அதிகளவில் இருக்கிறது. நாங்கள் பொழுதுபோக்க ஒட்டக சவாரி, வாட்டர் போட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் இருக்கிறது. பறவைகள் உலகத்தில் பாம்புகளை தொட்டு பார்க்கும்போது திரில்லிங்காக இருந்தது.

தேஜஸ்வினி, திருப்பாதிரிப்புலியூர், கடலுார்.

விதவிதமான ஸ்நாக்ஸ் 'புட் கோர்ட்டில் விதவிதமான ஸ்நாக்ஸ்கள் இருக்கிறது. வேணு பிரியாணி எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. எக்ஸ்போ உள்ளே சுற்றி பார்ப்பதற்கு மிகவும் பிடித்திருந்தது. அவதார் உலகம், பறவைகள் உலகை பார்த்து ரசித்தேன். ஒட்டக சவாரி சென்றபோது ஜாலியாக இருந்தது.

சாய்ஸ்ரீ, விழுப்புரம்.

அவதார் சூப்பராக இருந்தது ரயில் பெட்டியில் பயணம் செய்தேன். எக்ஸ்போவில் உள்ள அனைத்து கேம்களும் நன்றாக இருந்தது. எனக்கு பொழுதுபோனதே தெரியவில்லை. கேம்களில் ரொம்ப நேரம் ஜாலியாக விளையாடினேன். அவதார் உள்ளே சென்றபோது பயமாக இருந்தது. ஆனாலும், ரொம்ப ஜாலியா இருந்தது.

ஸ்டெலினா, புதுச்சேரி மரப்பாலம்.

பறவைகள் சத்தம் பிடித்திருந்தது எக்ஸ்போவில் கேட்ச் தி ஸ்டிக், ஜம்போ பஜார், பலுான் பஸ்டர், பாட்டில் ரிங் டாஸ் விளையாட்டுகள் ஜாலியாக இருந்தது. பறவைகள் உலகத்திற்கு உள்ளே சென்றதும், பறவைகள் என் மீது அமர்ந்து சத்தம் போட்டது ேஹப்பியாக இருந்தது. பறவைகள் உலகம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

ரியா, நெட்டப்பாக்கம்.

குட்டீஸ்கள் குஷி

பொம்மைகள் அதிகம்;எக்ஸ்போ ஜாலியாக இருந்தது. குழந்தைகளுக்கு தேவையான பொம்மைகள் அதிகளவில் இருக்கிறது. கேம்களில் விளையாடுவதற்காகவே நான் எக்ஸ்போவிற்கு வந்தேன். வாட்டர் ரோல் ரொம்ப ேஹப்பியாக இருந்தது.

கபிலன், பண்டசோழநல்லுார்.-------------------------

அவதார் பிடித்திருந்தது;குழந்தைகளுக்கு பிடித்த ஏராளமான கேம்ஸ்கள் எக்ஸ்போவில் உள்ளது. எனக்கு அனைத்து கேம்ஸ்களிலும் விளையாட ஆசையாக இருந்தது. அவதார் உலகத்தை பார்த்தபோது, நிஜமான அவதார்களை பார்த்ததுபோல ஜாலியாக இருந்தது. அவதார் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஆதிரா, முத்தியால்பேட்டை.

குட்டீஸ்கள் குஷி

பொம்மைகள் அதிகம்

எக்ஸ்போ ஜாலியாக இருந்தது. குழந்தைகளுக்கு தேவையான பொம்மைகள் அதிகளவில் இருக்கிறது. கேம்களில் விளையாடுவதற்காகவே நான் எக்ஸ்போவிற்கு வந்தேன். வாட்டர் ரோல் ரொம்ப ேஹப்பியாக இருந்தது.

கபிலன், பண்டசோழநல்லுார்.

அவதார் பிடித்திருந்தது

குழந்தைகளுக்கு பிடித்த ஏராளமான கேம்ஸ்கள் எக்ஸ்போவில் உள்ளது. எனக்கு அனைத்து கேம்ஸ்களிலும் விளையாட ஆசையாக இருந்தது. அவதார் உலகத்தை பார்த்தபோது, நிஜமான அவதார்களை பார்த்ததுபோல ஜாலியாக இருந்தது. அவதார் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஆதிரா, முத்தியால்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us