/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு
/
அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு
ADDED : செப் 20, 2025 11:36 PM
புதுச்சேரி : மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கைக்கா ன தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிலைய முதல்வர் அழகானந்தன் செய்திக்குறிப்பு:
அரசு தொழிலாளர் துறை பயிற்சி இயக்குனரகத்தின் கீழ், மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையம் மூலம் ஆண்டுதோறும் மாணவர்களுக்கு பல்வேறு தொழிற்பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு, சேர்க்கை முடிவடைந்தது, காலியாக உள்ள பிரிவுகளுக்கான நேரடி சேர்க்கை வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
அதில், பிட்டர், எலெக்ட்ரிசியன், ஏ.சி., டெக்னீசியன், மோட்டார் வாகன மெக்கானிக், ஒயர்மேன், வெல்டர், கட்டடம் கட்டுபவர், மின்சார வாகன மெக்கானிக், மற்றும் ட்ரோன் டெக்னீசியன் போன்ற பயிற்சி பிரிவுகளுக்கான நேரடி சேர்க்கை நடந்து வருகிறது.
பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறிய, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மதிப்பெண் மற்றும் மாற்றுச் சான்றிதழ்களுடன் நேரடியாக முதல்வரை சந்தித்து உடனடி சேர்க்கை பெற்றுக் கொள்ளலாம்.
தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவச சீருடை, மதிய உணவு மற்றும் மாதம் ரூ. 1,000 உதவிதொகை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.