/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேளாண் தொழிலாளர் சங்கத்தில் பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு
/
வேளாண் தொழிலாளர் சங்கத்தில் பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு
வேளாண் தொழிலாளர் சங்கத்தில் பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு
வேளாண் தொழிலாளர் சங்கத்தில் பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு
ADDED : அக் 30, 2025 07:31 AM
புதுச்சேரி: வேளாண் தொழிலாளர் நலச்சங்கத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ள வரும் 10ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நலச்சங்க தலைமை செயல் அலுவலர் முத்துகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
வேளாண் தொழிலாளர்கள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வேளாண் துறையின் கீழ் புதுச்சேரி வேளாண் தொழிலாளர் நலச்சங்கம் செயல்படுத்தி வருகிறது. வேளாண் தொழிலாளர்கள் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கு, தொழிலாளர் நலச்சங்கத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்வது அவசியமாகும். மேலும், பழைய உறுப்பினர்கள் புதுப்பித்துக் கொள்ளவும், புதிதாக உறுப்பினர்களை சேர்ப்பதற்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விண்ணப்பிக்க விரும்பும் வேளாண் தொழிலாளர்கள் பிறப்பு சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், புதிதாக எடுக்கப்பட்ட மார்பளவு புகைப்படம்- 1, அட்டவணை இனத்தவர் அதற்கான வருவாய்த்துறை சாதி மற்றும் வருமான சான்றிதழ், சான்றளிக்கும் விவசாயியின் ஆதார் நகல் ஆகிய ஆவணங்களை தங்களது விண்ணப்பத்துடன் இணைத்து நேற்று (29ம் தேதிக்குள்) அந்தந்த பகுதி உழவர் உதவியகத்தில் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், விண்ணப்பங்களை சமர்ப்பிதற்கான காலக்கெடு தற்போது வரும் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை வேளாண் தொழிலாளர்கள் பயன்படுத்தி கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

