தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி பா.ஜ.,வில் உச்சகட்ட குழப்பம் மேலிட பார்வையாளர் நாளை வருகை

புதுச்சேரி பா.ஜ.,வில் உச்சகட்ட குழப்பம் மேலிட பார்வையாளர் நாளை வருகை

புதுச்சேரி பா.ஜ.,வில் உச்சகட்ட குழப்பம் மேலிட பார்வையாளர் நாளை வருகை


ADDED : நவ 26, 2024 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2024 05:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பா.ஜ.,வில் ஏற்பட்டுள்ள உச்சகட்ட குழப்பத்தை தொடர்ந்து மேலிட பார்வையாளர் நாளை புதுச்சேரி வருகிறார்.

புதுச்சேரி அமைச்சரவையில் அங்கம் வகித்துள்ள பா.ஜ.,வை சேர்ந்த சாய் சரவணன்குமார் வசமிருந்த முக்கிய இலாகாக்கள் பறிக்கப்பட்டது. இதனால், அதிருப்தியடைந்த அவர், இழந்த பதவியை பெற்றுத் தர வேண்டி கவர்னிடம் மனு அளித்துள்ளதோடு, அமைச்சரவையில் தனக்கு கடைசி இடம் தானா? என போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

இந்நிலையில் பா.ஜ., மற்றும் பா.ஜ., ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சுழற்சி முறையில் அமைச்சர் பதவி பெறவும், வாரிய தலைவர் பதவிக்கும் பல்வேறு வகையில் முயன்றனர். அதில் பலனளிக்காததால், விரக்தியடைந்த அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், லாட்டரி அதிபர் மார்ட்டினை முன்னிறுத்தி தனி அணியாக அரசியல் களம் காண்பதற்கான பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால், பா.ஜ.,வில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்னைகளுக்கு, சுமூக தீர்வு கண்டு, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக கட்சியின் மேலிட பொறுப்பாளரான நிர்மல் குமார் சுரானா நாளை புதுச்சேரி வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us