/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கண் தானம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு 10 நாட்களில் சான்றிதழ்
/
கண் தானம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு 10 நாட்களில் சான்றிதழ்
கண் தானம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு 10 நாட்களில் சான்றிதழ்
கண் தானம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு 10 நாட்களில் சான்றிதழ்
ADDED : பிப் 05, 2025 05:50 AM
புதுச்சேரி: கண் தானம் செய்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு 10 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்படும் என உழவர்கரை தாசில்தார் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உழவர்கரை தாசில்தார் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இறந்தவர்களின் கண்கள் அல்லது உடல் தானம் செய்யப்பட்டிருந்தால், வாரிசுதாரர் சான்றிதழ் கோரும் விண்ணப்பம், ஆவணங்களுடன் சரியாக இருந்தால் விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் வாரிசு சான்றிதழ் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் தாசில்தாரை நேரடியாக அணுகலாம். இறந்த 4 முதல் 6 மணி நேரத்திற்குள் உறவினர்கள் இறந்தவரின் கண்களை தானம் செய்யலாம்.
கண் தானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள், ஜிப்மர் கண் மருத்துவ வங்கி 0413-2275666, அரவிந்தர் கண் மருத்துவமனை 0413-2619100, இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை 9787381306, ஜோதி கண் மருத்துவமனை 1919 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.