ADDED : மார் 11, 2024 04:24 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி, : புதுச்சேரி ஆயுதப்படை போலீஸ் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இரு நாள் இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாம், கோரிமேடு பேண்ட் இசைக்குழு வளாகத்தில் நேற்று துவங்கியது.
முகாமை ஜோதி கண் பரிசோதனை மைய டாக்டர் வனஜா வைத்தியநாதன் துவக்கி வைத்தார். ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சாந்தி முன்னிலை வகித்தார். முகாமில் போலீசார் மற்றும் பயிற்சி போலீசாருக்கு கண் மற்றும் பல் பரிசோதனை செய்யப்பட்டது. முகாம் இன்றும் (10ம் தேதி) நடக்கிறது. இதில் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
