/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்
/
கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : மார் 24, 2025 04:23 AM
புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவமனை கண் பிரிவு, தேசிய கண் பார்வை இழப்பு தடுப்பு திட்டம் சார்பில் தேசிய கண் நீர் அழுத்த நோய் வாரத்தை முன்னிட்டு, கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
மருத்துவமனையில் நடந்த கருத்தரங்கத்திற்கு, கண் பிரிவு துறை தலைவர் தணிகாசலம் வரவேற்றார். தலைமை கண்காணிப்பாளர் செவ்வேள், கருத்தரங்கை துவக்கி வைத்தார். உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமிமுனிஷா பேகம், மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன், ரவி ஆகியோர் வாழ்த்தி பேசினர். கண் பிரிவு துறையில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
அரவிந்த் கண் மருத்துவமனை, கிளாக்கோமா சிறப்பு நிபுணர் கவிதா, கிளாக்கோமா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, கிளாக்கோமா விழிப்புணர்வு குறித்த வினாடி - வினா நிகழ்ச்சி நடந்தது.
இதில், புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை பணியாளர்கள், அரசு சாரா தொண்டு நிறுவன சமூக பணியாளர்கள், தேசிய சுகாதார இயக்க தரவு நுழைவு ஆப்ரேட்டர்கள், செவிலிய மற்றும் துணை மருத்துவம் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
டாக்டர் பிரணித்தா நன்றி கூறினார்.