/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விபத்தினால் ஏற்படும் முக சிதைவை ஏ.ஐ., துணையுடன் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரலாம் பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர் முகமது இப்ராகிம் தகவல்

ADDED : செப் 28, 2024 06:23 AM

புதுச்சேரி : விபத்தினால் ஏற்பட்ட முகசிதைவை செயற்கை நுண்ணறிவு துணையுடன் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரும் அதி நவீன சிகிச்சை முறைகள் மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ளது என பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் முகமது இப்ராகிம் கூறினார்.
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடந்த மருத்துவ கருத்தரங்கை மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் துவக்கி வைத்தார்.
சென்னை சிம்ஸ் மருத்துவமனை பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் முகமது இப்ராகிம் பேசுகையில், விபத்தில் முகசிதைவு ஏற்பட்டவர்களுக்கு சிடி ஸ்கேன் மற்றும் 3டி மாடலிங் உதவியுடன், ஸ்டீரியோ லித்தோ கிராபிக் மாடல் மூலம் பிளாஸ்டிக் மெட்டிரியலில் நகலெடுக்கப்பட்ட கபால பகுதியை, வைத்து கொண்டு அதில் முகச்சிதைவு பகுதிகளை டைட்டானியம் பிளேட் போன்றவை கொண்டு அறுவை சிகிச்சை செய்தால் 90 சதவீதம் பழைய நிலைக்கு பாதிக்கப்பட்டவரின் முக அமைப்பை கொண்டு வர முடியும்.
முகச்சிதைவு நபரின் பழைய புகைப்படத்தை வைத்து செயற்கை நுண்ணறிவு துணையுடன், அவரது முகம் பழைய நிலைக்கு கொண்டுவரும் அதிநவீன மருத்துவ சிகிச்சை முறைகள் மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளை விட மருத்துவ கட்டணம் குறைவு மற்றும் தரமான சிகிச்சை கிடைப்பதால், வளரும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் சென்னைக்கு வருகின்றனர் என அவர் கூறினார்.
கருத்தரங்கில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமிமுனிஸா பேகம், மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன், குறைதீர் அதிகாரி ரவி, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ரன்வீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.