/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு 'சீல்'
/
போலி குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு 'சீல்'
ADDED : அக் 11, 2025 05:54 AM

திருவெண்ணெய்நல்லுார் : உளுந்துார்பேட்டையில் அனுமதி இன்றி இயங்கி வந்த போலி குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்து வாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
உளுந்துார்பேட்டை கணேசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி. இவர், தனது வீட்டில் எவ்வித அனுமதி இன்றியும், தரச்சான்று பெறால் எஸ்.ஜி.எம் அக்குவா என்ற பெயரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் மற்றும் கேன்கள் விநியோகிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார்.
ஐ.எஸ்.ஐ., தரச் சான்று பெறாமலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களை தயாரித்து விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது. இதையெடுத்து, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில், உளுந்துார்பேட்டை வட்டார உணவு துறை அதிகாரிகள் மான்சி, கற்பகம், சுரேந்தர், பாஸ்கர் ஆகியோர் நேற்று குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சோதனை செய்தனர்.
அப்போது குடிநீர் சுத்திகரித்து விற்பனை செய்ய உரிய அனுமதி மற்றும் தரச்சான்றுகள் இன்றி சுகாதாரமற்ற முறையில் குடிநீர் தயாரித்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, தயாரித்து வைக்கப்பட்டு இருந்த 3 ஆயிரம் தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு சீல் வைத்தனர்.