ADDED : ஆக 15, 2025 11:27 PM
புதுச்சேரி: கே.ஆர்.பாளையத்தில் மனைவி கண்டித்ததால், பூச்சிக்கொல்லி மருந்து குடித்து, விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கனுார், கே.ஆர்.பாளையம், வி.ஐ.பி., நகரை சேர்ந்தவர் சக்திவேல், 35; விவசாயி. இவருக்கு, லட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய சக்திவேல், தினமும் குடித்துவிட்டு, விவசாய பணிக்கு செல்லாமல், வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இதனை லட்சுமி கண்டித்ததால், இருவருக்கும் இடையே கடந்த 12ம் தேதி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, லட்சுமி தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று விட்டு, இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டில் இருந்த சக்திவேல், காலையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, மனமுடைந்து பூச்சிகொல்லி மருந்து குடித்து விட்டதாக மனைவியிடம் தெரிவித்தார்.
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, சக்திவேல் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.புகாரின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.