ADDED : ஏப் 26, 2026 08:48 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: விவசாயி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தவளக்குப்பம், பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 40; விவசாயி. இவர் கடந்த சில நாட்களாக பயந்த மனநிலையில் இருந்து வந்தார். யாரோ அடிக்க வருவதாக அதனால், வீட்டில் இருப்பவர்களை பக்கத்தில் இருக்க சொல்லி புலம்பி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அவர், வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
