/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாயிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பு
/
விவசாயிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பு
ADDED : டிச 06, 2025 05:11 AM
புதுச்சேரி: புதுச்சேரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் கீதநாதன் அறிக்கை:
விதைச் சட்டம் 2025, விதைகளின் மீதான விவசாயிகளின் உரிமையை பன்னாட்டு, உள்நாட்டு பெரு நிறுவனங்களிடம் ஒப்படைக்கவும், விதை நிறுவனங்கள் விதைகளின் விலைகளை கடுமையாக உயர்த்தி லாபம் அடிக்க வழி வகுக்கவும், விவசாயிகள், மாநில அரசு உரிமைகளை பறிக்க மத்திய அரசு விதை உரிமைச் சட்டம் - 2025 கொண்டு வந்துள்ளது.
மின்சார திருத்த சட்டம் -2020 விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமல் கொண்டு வர மாட்டோம் என கூறிய மத்திய அரசு, மின்சார திருத்த சட்டம் 2025 கொண்டு வந்துள்ளது.
இந்த இரண்டு சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்த அகில இந்திய தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, புதுச்சேரியில் இப்போராட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

