/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உரிமம் பெறாத கடைகளுக்கு 'சீல்' உழவர்கரை ஆணையர் எச்சரிக்கை
/
உரிமம் பெறாத கடைகளுக்கு 'சீல்' உழவர்கரை ஆணையர் எச்சரிக்கை
உரிமம் பெறாத கடைகளுக்கு 'சீல்' உழவர்கரை ஆணையர் எச்சரிக்கை
உரிமம் பெறாத கடைகளுக்கு 'சீல்' உழவர்கரை ஆணையர் எச்சரிக்கை
ADDED : நவ 08, 2024 05:00 AM
புதுச்சேரி: வணிக உரிமம் பெறாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் எச்சரித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
உழவர்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதி களில் வணிக உரிமம் பெறாமல் எந்த ஒரு வணிகம், தொழிற்சாலைகள், கிளினிக், பெட்டிக்கடை, நிதி நிறுவனம் நடத்த கூடாது. அப்படி உரிமம் பெறாமல் நடத்தப்படும் வணிக வளாகம், தொழிற்சாலைகளுக்கு சீல் வைப்பதற்கு, புதுச்சேரி நகராட்சி சட்டம் வழிவகை உள்ளது.
அதன்படி, வணிகம் உரிமம் பெறாத வணிகர்களுக்கு 7 நாட்களுக்குள் நோட்டீஸ் கொடுத்து சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, வணிக உரிமம் பெறாத வணிகர்கள் நகராட்சியை அணுகி உரிமம் பெற வேண்டும். எந்தந்த வணிகத்திற்கு உரிமம் பெற வேண்டும், கட்டண விபரங்கள், உரிமம் பெறுவதற்கான விண்ணப்பம் ஆகியவை www.oulmun.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வணிகர்கள் தங்களது விண்ணப்பங்களை www.lgrams.py.gov.in என்ற இணையதளத்திலும் சமர்பிக்கலாம். வணிக உரிமம் பெறுவதில் சிரமம் இருந்தால், ஜவகர் நகரில் உள்ள அலுவகத்தில் உள்ள உதவி மையம் அல்லது 75981-71674 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.