/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உழவர் பயிற்சி மையத்தில் விவசாயிகள் தின விழா
/
உழவர் பயிற்சி மையத்தில் விவசாயிகள் தின விழா
ADDED : டிச 24, 2024 05:54 AM

புதுச்சேரி: காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணைந்து, விவசாயிகள்தினம் விழாவை கொண்டாடின.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் அறிவுறுத்தலின்படி, தட்டாஞ்சாவடி உழவர் பயிற்சி மையத்தில் நேற்று விவசாயிகள்தினம் கொண்டாடப்பட்டது. அமைச்சர் தேனீ ஜெயகுமார் விழாவை துவக்கி வைத்தார்.
திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் வரவேற்றார். திட்ட இயக்குநர் ஜாகிர்உசேன், துணை திட்ட இயக்குநர் கலைச்செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குநர் வசந்தகுமார் விளக்கவுரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில், கூடுதல் வேளாண் இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் பிரபு நன்றி கூறினார்.