ஏனாமில் டீசல் தட்டுப்பாடு கேன்களுடன் குவியும் விவசாயிகள்
ஏனாமில் டீசல் தட்டுப்பாடு கேன்களுடன் குவியும் விவசாயிகள்
ADDED : ஏப் 29, 2026 04:37 AM
புதுச்சேரி: ஏனாமில் டீசல் தட்டுபாடு நிலவி வருவதால், பெட்ரோல் பங்குகளில் ஆந்திரா மாநில விவசாயிகள் கேன்களுடன் குவிந்து வருகின்றனர்.
ஏனாம் மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் இயந்திரங்கள் மூலம் விவசாய அறுவடை செய்கின்றனர். மேலும், கடலோரப் பகுதியில், இறால் பண்ணைகளில் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தி வருவதால், டீசலின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால், பெட்ரோல் பங்குகளில் டீசல் தீர்ந்து, தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில், ஏனாம் பகுதியில் உள்ள பங்குகளில் டீசல் வாங்க ஏனாம் மற்றும் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் கேன்களுடன் குவிந்து வருகின்றனர். டீசல் தட்டுப்பாடு நிலவி வருவதால் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் குறைவாக இயக்கப்பட்டு வருகிறது.
ஆந்திரா மாநிலத்தை விட ஏனாமில் டீசல் குறைந்த விலைக்கு கிடைப்பதால், அருகில் உள்ள ஆந்திரா மாநில விவசாயிகள் ஏனாம் பெட்ரோல் பங்குகளுக்கு படையெடுத்து டீசலை கேன்கள் மூலம் வாங்கி செல்கின்றனர். இதனால் பெட்ரோல் பங்குகளில் டீசல் தட்டுபாடு ஏற்பட்டு வருகிறது.
இதையெடுத்து, ஏனாம் மண்டல நிர்வாக அதிகாரி சிவராஜ் மீனா, 'காலை 5:00 முதல் 8:00 மணி வரை உள்ளூர் மக்களுக்கு கண்டிப்பாக டீசல் வழங்க வேண்டும்' என, அறிவித்துள்ளார்.
