/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ரயில் மறியல்
/
மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ரயில் மறியல்
ADDED : டிச 17, 2024 05:20 AM

காரைக்கால்: புதுச்சேரி மாநில ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து காரைக்காலில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.
விவசாயிகள் சங்க முதன்மை ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். விவசாயிகள் சோமு, கேசவன், தமீம் முன்னிலை வகித்தனர். இதில் விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரா விலை நிர்ணய சட்டம் கொண்டு வரவேண்டும்.
இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார ஒருங்குமுறை சட்டத்தை திரும்ப பெறவேண்டும். விவசாயிகள் பெற்ற கடன் முழுதையும் தள்ளுபடி செய்து விவசாயிகள் தற்கொலையை தடுத்து நிறுத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி விவசாயிகள் திருச்சி சென்ற ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
போலீசார் இவர்களை தடுத்து நிறுத்தவே, ரயில் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50க்கு மேற்பட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.