/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காட்டுப்பன்றியால் விவசாயிகள் அவதி
/
காட்டுப்பன்றியால் விவசாயிகள் அவதி
ADDED : நவ 01, 2024 05:31 AM
நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுாரில் விவசாய பயிர்களை காட்டுப்பன்றிகள் கூட்டம் சேதப்படுத்தி வருவதால், விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார், வீராணம், நெட்டப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தங்களது விவசாய நிலங்களில் நெல், கரும்பு, மரவள்ளி கிழங்கு உள்ளிட்டவைகளை பயிர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டுப் பன்றிகள் இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக வந்து,விளை நிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி செல்கின்றன.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இதையடுத்து விவசாயிகள் காட்டு பன்றிகளை விரட்ட இரவு நேரங்களில் ஒலி பெருக்கி மற்றும் வெடி வெடித்து துரத்தி, பயிர்களை பாதுகாத்து வருகின்றனர்.
எனவே பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.