/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னர், முதல்வருக்கு விவசாயிகள் நன்றி
/
கவர்னர், முதல்வருக்கு விவசாயிகள் நன்றி
ADDED : ஜன 31, 2025 07:39 AM
புதுச்சேரி; புயல் நிவாரணத் தொகை விரைந்து கிடைக்க நடவடிக்கை மேற்கொண்ட கவர்னர், முதல்வர் ஆகியோருக்கு விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைப்பு குழு பொருளாளர் ஜெயராமன் அறிக்கை:
பெஞ்சல் புயல் காரணமாக, புதுச்சேரி மாநில விவசாய பகுதிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. இதையடுத்து, கவர்னர், முதல்வர், வேளாண் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு பாதித்த பகுதிகளை உடனடியாக பார்வையிட்டனர்.
தொடர்ந்து, விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் அறிவித்து, அரசு மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக பெரும் முயற்சி எடுத்த கவர்னர், முதல்வர், வேளாண் அமைச்சர், அதிகாரிகளுக்கு, விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

