/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகளுக்கு மஞ்சள் நீராட்டு தந்தை தற்கொலை
/
மகளுக்கு மஞ்சள் நீராட்டு தந்தை தற்கொலை
ADDED : நவ 10, 2024 04:38 AM
புதுச்சேரி : மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்க உள்ள நிலையில் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனுார் அடுத்த மேல்சாத்தமங்கலம் குளத்து மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் 36, தனியார் கம்பெனி லோடு மேன். இவர் காதல் திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவி கமலி. இரண்டு மகள்கள் உள்ளனர்.
மூத்த மகள் வினோதினிக்கு மஞ்சள் நீராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான பத்திரிக்கை உறவினர்களுக்கு வைத்து வருகிறார். விழாவிற்கு போதுமன பணம் கிடைக்காததால் மனமுடைந்த வெங்கடேசன், வீட்டில் புடவையால் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகளின் மஞ்சள் நீராட்டு விழா நடக்க 10 நாட்கள் உள்ள நிலையில் தந்தை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.