ADDED : டிச 16, 2025 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
ஏம்பலம், தாமரைகுளத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் யுவஸ்ரீ, 23; இவர் கடந்த 11ம் தேதி தனது தந்தையுடன் புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனைக்கு செல்ல பஸ்சில் வந்துள்ளார். புதுச்சேரி பஸ் நிலையத்திற்கு வந்த பார்த்தபோது யுவஸ்ரீயை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

