ADDED : ஆக 28, 2026 08:31 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வீட்டில் இருந்து வெளியில் சென்ற தந்தையை காணவில்லை என, மகள் போலீசில் புகார் செய்தார்.
புதுச்சேரி கருவடிக்குப்பம், பாரதி நகரை சேர்ந்தவர் மணி, 76. இவர் கடந்த 24ம் தேதி, வீட்டில் இருந்து வெளியில் சென்றார். மாலை வரை வராததால், வீட்டில் இருந்தவர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவரது மகள் விசாலாட்சி கொடுத்து புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
