/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அப்பாடா ஒரு வழியா விடிவு காலம் வந்துடுச்சி... சொந்த கட்டடத்திற்கு போறாங்கப்பா லாஸ்பேட்டை போலீஸ்
/
அப்பாடா ஒரு வழியா விடிவு காலம் வந்துடுச்சி... சொந்த கட்டடத்திற்கு போறாங்கப்பா லாஸ்பேட்டை போலீஸ்
அப்பாடா ஒரு வழியா விடிவு காலம் வந்துடுச்சி... சொந்த கட்டடத்திற்கு போறாங்கப்பா லாஸ்பேட்டை போலீஸ்
அப்பாடா ஒரு வழியா விடிவு காலம் வந்துடுச்சி... சொந்த கட்டடத்திற்கு போறாங்கப்பா லாஸ்பேட்டை போலீஸ்
ADDED : டிச 14, 2025 05:40 AM

லாஸ்பேட்டையில் கடந்த 1991ம் ஆண்டு வாடகை கட்டடத்தில் புறக்காவல் நிலையம் துவங்கப்பட்டது. பின், போலீஸ் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு, தொடர்ந்து வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் போலீசார் போதிய இட வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, மடுவுபேட், இ.சி.ஆரில் கடந்த 2021ம் ஆண்டு அப்போதைய முதல்வர் நாராயணசாமி, லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு சொந்த கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டினார். ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து ஸ்டேஷன் கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டது.
அதையடுத்து, தேர்தலில் வெற்றி பெற்று என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பின், மீண்டும் மடுவுபேட் இ.சி.ஆரில் லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் கட்ட ரூ.2.72 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது.
கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி அடிக்கல் நாட்டினார்.
எட்டு மாதத்தில் முடிய வேண்டிய பணி பல மாதமாக ஜவ்வாக இழுத்தது. கட்டடம் கட்டி முடிந்தாலும் அதன் அருகில் ஆக்கிரமிப்பு கொட்டகை காரணமாக குடி புகவில்லை. இப்போது அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட சூழ்நிலையில் இன்று 14ம் தேதி புதிய கட்டடத்திற்கு குடிபுக லாஸ்பேட்டை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்த கட்டடத்தை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளனர்.
ரூ.2 கோடியே 74 லட்சத்து 66 ஆயிரத்து 58 செலவில் கட்டப்பட்ட இந்த புதிய கட்டடத்தில் 225 ச.மீ. அளவுள்ள தரைத்தளத்தில் முகப்பு வளாகம், நிலைய அதிகாரி அறை, எழுத்தர் அறை ஆகியவையும், 216 ச.மீ. அளவுள்ள முதல் தளத்தில் ஆலோசனைகூடம், கம்பியில்லா தொலைபேசி அறை, அலுவலக அறை, காவலர் அறை, ஆயுத அறை, வட்ட ஆய்வாளர்கள் அறை மற்றும் 216 ச.மீ. அளவுள்ள 2-ம் தளத்தில் பதிவாளர் அறை, பொருட்களை வைக்கும் அறை, குற்றம் மற்றும் குற்றப்பின்னணி கண்காணிப்பு தகவல் அறை மற்றும் ஆண் பயிற்சி காவலர்கள் தங்குமிடம் ஆகியவை அமைக்கப் பட்டுள்ளது.

