ADDED : பிப் 05, 2024 03:55 AM
புதுச்சேரி : வேலைக்கு செல்லவில்லை என தந்தை கண்டித்ததால், மகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பங்கூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் ரஞ்சித்குமார் 31, தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் காலில் அடிப்பட்டதால் வீட்டில் இருந்து வருகிறார். அதன்பிறகு ரஞ்சித்குமார் எங்கும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இதனை ராஜேந்திரன் கண்டித்தார். இதனால் மனமுடைந்த ரஞ்சித்குமார் கடந்த 22ம் தேதி வீட்டில் உள்ள மின்விசிறியில் நைலான் கயிற்றில் துாக்கு போட்டுக்கொண்டார்.
உறவினர்கள் அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

