ADDED : ஏப் 27, 2026 10:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கோவிலுக்கு சென்ற தந்தையை காணவில்லை என மகள் போலீசில் புகார் செய்தார்.
லாஸ்பேட்டை நெசவாளர் நகரை சேர்ந்தவர் காத்தவராயன், 78; இவர் வெளியூர்களில் உள்ள கோவில்களுக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த 17ம் தேதி, கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு வராததால் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

