/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாத்திமா ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
/
பாத்திமா ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 31, 2025 02:19 AM

புதுச்சேரி:  பாத்திமா ஓய்வூதியர்கள் சார்பில் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம், கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் எதிரே நடந்தது.
சங்க செயலாளர் ஆல்பர் ட் மார்ட்டின் தலைமை தாங்கினார். பாத்திமா மேல்நிலைப் பள்ளி ஓய்வூதியர்கள் கிருஷ்ணமூர்த்தி, சின்னப்பன், ராஜாராம், வேணு உள்ளிட்ட பல்வேறு அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஓய்வூதியர்கள் கலந்து கொண் டனர்.
அரசு நிதி உதவி பெறும் ஓய்வூதியர்கள் சங்கத் தலைவர் அந்தோணிசாமி, செயலாளர் சீத்தாலட்சுமி கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், ஓய்வூதியர்களுக்கு நிர்வாகத்தின் பங்கு 5 சதவீதம் கட்ட வேண்டுமென கோர்ட் பிறப்பித்த 2 உத்தரவுகளை பாத்திமா மேல்நிலைப் பள்ளி செயல்படுத்த வேண்டும்.
அதனை பேராயர் மற்றும் மறைமாவட்ட நிர்வாகம் கோர்ட் உத்தரவை நிறைவே ற்ற பாத்திமா பள்ளிக்கு அறிவுறுத்த வேண்டும்.
மறுக்கும் பட்சத்தில் பள்ளியின் முதல்வர், தாளாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

