/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஹெலிபேட் மைதானத்தில் 'வாக்கிங்' செல்வோர் அச்சம்: கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படுமா?
/
ஹெலிபேட் மைதானத்தில் 'வாக்கிங்' செல்வோர் அச்சம்: கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படுமா?
ஹெலிபேட் மைதானத்தில் 'வாக்கிங்' செல்வோர் அச்சம்: கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படுமா?
ஹெலிபேட் மைதானத்தில் 'வாக்கிங்' செல்வோர் அச்சம்: கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படுமா?
ADDED : ஜன 01, 2026 04:04 AM

புதுச்சேரி: ஹெலிபேட் மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளில் போதிய கண்காணிப்பு கேமராக்கள் இல்லாதது பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
லாஸ்பேட்டை, ஹெலிபேட் மைதானத்தில் தினமும் காலை, மாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் வாக்கிங் செல்கின்றனர். இதேபோல், நுாற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களும் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ெஹலிபேடு மைதானம் வெளிச்சம் இல்லாமல் இருளில் மூழ்கி கிடந்தது. பாதுகாப்பு இல்லாமலும் இருந்தது.
அதையடுத்து ஹெலிபேட் மைதானத்தில், ஐந்து இடங்களில் பொதுப்பணித் துறை சார்பில், ைஹமாஸ் விளக்குகள் அமைக்கப்பட்டன. இவற்றிற்கு தற்போது மின் இணைப்பு கொடுத்து ஜொலிக்கின்றன. பொது மக்கள் நிம்மதியாக வாங்கிங் செல்கின்றனர்.
ஆனால், இவ்வளவு மக்கள் கூடும் இடத்தில் பாதுகாப்பு வசதிகள் இல்லாதது பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏர்போர்ட் சாலையில் நாவலர் நெடுஞசெழியன் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிமாமுனிவர் மேற்படிப்பு மையம், என்.சி.சி., வளாகம் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.
மற்ற இடங்களில் போதிய எண்ணிக்கையில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்படவில்லை. குறிப்பாக ெஹலிபேட் மைதானம், நீதிபதி குடியிருப்புகள் உள்ள கல்லுாரி சாலைகளில் ஒரு கண்காணிப்பு கேமராவும் இல்லாதது பொது மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்த சாலைகளில் அதிகாலை மற்றும் இரவுப் பொழுதுகளில் வாக்கிங் மேற்கொள்ளும் பெண்கள், முதியவர்கள் மனதில் அச்சத்துடன் செல்கின்றனர்.
ெஹலிபேடு மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் வாங்கிங் செல்லும்போது, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நேர்ந்தால், அதை கண்காணிக்கவும் தடுப்பதற்கும் எந்த கண்காணிப்பு இல்லாதது பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கண்காணிப்பு கேமராக்கள் மக்களுக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் அளிக்கும் பாதுகாப்புக் காவலர்கள்.
அவை குற்றச் செயல்களைத் தடுக்கவும், சமூக ஒழுங்கை நிலைநாட்டவும், அவசர நேரங்களில் உடனடி நடவடிக்கைக்கு வழிவகுக்கவும் உதவுகின்றன.
எனவே, லாஸ்பேட்டை மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து வாக்கிங் பாதைகளிலும் தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவ வேண்டும். இது பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு மட்டுமின்றி, அவர்கள் அச்சமின்றி நிம்மதியாக நடைபயிற்சி மேற்கொள்ளும் சூழலையும் உருவாக்கும்.
இது தொடர்பாக புதுச்சேரி அரசு, பொதுப்பணித் துறை, உழவர்கரை நகராட்சி ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

