/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரதமரை சந்தித்து மாநில அந்தஸ்தினை வலியுறுத்த கூட்டமைப்பு கோரிக்கை
/
பிரதமரை சந்தித்து மாநில அந்தஸ்தினை வலியுறுத்த கூட்டமைப்பு கோரிக்கை
பிரதமரை சந்தித்து மாநில அந்தஸ்தினை வலியுறுத்த கூட்டமைப்பு கோரிக்கை
பிரதமரை சந்தித்து மாநில அந்தஸ்தினை வலியுறுத்த கூட்டமைப்பு கோரிக்கை
ADDED : மார் 17, 2025 02:34 AM
புதுச்சேரி: மாநில அந்தஸ்து தொடர்பாக பிரதமர், உள்துறை அமைச்சரை முதல்வர் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் அறிக்கை:
கடந்த சட்டசபையில் புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் ரங்கசாமி எம்.எல்.ஏ.,க்கள்., அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்பினர் என அனைவரையும் டில்லி அழைத்துச் சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து மாநில தகுதி வழங்க வலியுறுத்துவோம் என்றார். அறிவித்தபடி இதுவரை செய்யவில்லை.
ஆனால், தற்போது, கவர்னர் குஜராத் செல்கிறார். அப்போது பிரதமர், உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மாநிலத் தகுதி, நிதிக் குழுவில் சேர்ப்பது குறித்துப் பேசுவார். மாநிலத் தகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என சட்டசபையில் பேசியுள்ளார்.
சட்டசபையில் மாநிலத் தகுதி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி இதுவரையில் 15 முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், மத்திய அரசு புதுச்சேரி மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேறவில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சார்பில் முதல்வர் தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்புகளின் பொறுப்பாளர்கள் டில்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்க வலியுறுத்த வேண்டும். இதற்கு முதல்வர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.