ADDED : செப் 29, 2024 05:01 AM
காட்டேரிக்குப்பம் வனத்துறை பராமரிப்பில் உள்ள மரங்கள் வெட்டி கடத்தப்படுவதால், காடுகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி, காட்டேரிக்குப்பம் ஏரியையொட்டி, 35 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வனப்பகுதியை புதுச்சேரி அரசு வனத்துறை பராமரித்து வருகிறது.
இங்கு, பல நுாற்றாண்டுகள் கடந்த பழமையான மரங்கள், மூலிகை செடிகள், மூங்கில் மரங்கள் உள்ளிட்டவை உள்ளன. மான், முயல்கள், மயில், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளும் வசிக்கின்றன.
இந்நிலையில், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியில் தற்போது போதிய பராமரிப்பு மற்றும் ஊழியர்கள் இல்லாத காரணத்தால், சமூக விரோதிகள் சிலர் வனப்பகுதிக்குள் சென்று பழமையான மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர்.
மேலும், அங்குள்ள வனவிலங்குகளும் வேட்டையாடப்பட்டு வருகின்றன. இதனால், வனப்பகுதி முற்றிலும் அழியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.